< Back
மாநில செய்திகள்
சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில்  எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
19 May 2022 1:54 PM GMT

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு கணவாய்பட்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செஞ்சிலுவை அமைப்பு மற்றும் செஞ்சுருள் அமைப்பு சார்பில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாவரவியல் துணைத்தலைவரும் செஞ்சிலுவை அமைப்பு திட்ட அலுவலருமான ராஜசேகர் வரவேற்றார். ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மைய அலுவலர் அன்புச்செல்வி முன்னிலை வகித்து, எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், அறிகுறிகள், தன்மை மற்றும் அதற்கான மருத்துவ முறைகள் குறித்து பேசினார்.

நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் மக்கள் நல சங்க அலுவலர் கருணாநிதி கலந்து கொண்டு அரசின் மருத்துவ உதவிகள் குறித்து பேசினார். இதில் கணித துறை தலைவர் வெங்கடேசன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், துறைத்தலைவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சுருள் அமைப்பு திட்ட அலுவலர் ராமநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்