திருவண்ணாமலை
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
|திருவண்ணாமலையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
பின்னர் அவரது தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உலக மக்கள் தொகை தின பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசு வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.
ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நிறைவடைந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் (குடும்ப நலம்) அன்பரசி, துணை இயக்குனர் (காசநோய்) அசோக், உதவி கலெக்டர் வெற்றிவேல், நகராட்சி ஆணையர் முருகேசன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சி.எஸ்.ரமணன், மக்கள் கல்வி தகவல் அலுவலர் அமரேந்திரன், டாக்டர்கள் அலமேலு, சாய்பிரசன்னா, ராதாமாதவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.