< Back
மாநில செய்திகள்
உலக மனநல தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
கரூர்
மாநில செய்திகள்

உலக மனநல தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
11 Oct 2023 11:28 PM IST

உலக மனநல தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக மனநல தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் வளாகத்தில் இருந்து ெதாடங்கிய ஊர்வலம் விளையாட்டு மைதானம் வரை சென்று நிறைவடைந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்போடு இருப்போம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதலாய் நடப்போம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனிய சொற்களால் இதமளிப்போம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈகை குணத்தால் இன்பம் அளிப்போம் என்பனன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். முன்னதாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவது மற்றும் அன்பாய் இருப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேபோல் தனியார் கல்லூரி சார்பில் உலக மனநல தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கரூர் பஸ்நிலையம், ஜவகர்பஜார் வழியாக சென்று கரூர் தலைமை தபால் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்