< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வன தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
|22 March 2023 11:15 PM IST
வன தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச வன தினத்தையொட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் உள்ளூர் மரங்கள் பாதுகாப்போம், காடுகளை பாதுகாப்போம், மரங்கள் வெட்டுவதை தவிர்ப்போம், வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம், காற்று மாசுபடுதலை தடுக்க மரங்களை பராமரிப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கல்லூரி மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த ஊர்வலத்தை மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தொடங்கி வைத்தார். இதில் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மேரி வயலட் கிறிஸ்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் முத்துமணி உள்பட பலர் செய்திருந்தனர்.