< Back
மாநில செய்திகள்
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
31 Dec 2022 10:15 PM IST

வாணியம்பாடியில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போதை பொருட்களை தடை செய்யவும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி கோரியும், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வாணியம்பாடியில் நடந்தது.

வேலூர் மண்டல செயலாளர் எம்.ஞானதாஸ் தலைமை தாங்கினார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் வாணியம்பாடி நகர செயலாளர் பத்மநாபன், மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி, நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் பாலுசாமி,

ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் சாது, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளை சே்ாந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

.

மேலும் செய்திகள்