< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
கரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
29 April 2023 12:44 AM IST

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், வரவணையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கடவூர் வட்டார கல்வி அலுவலர் தர்மராஜ் தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றன. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் நாகலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியப்பன், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்