< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு
|17 April 2023 12:54 AM IST
தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீத்தார் நினைவு நாளையொட்டி பணியின்போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நடந்தது. இதனைதொடர்ந்து தீயணைப்புத்துறையின் சார்பில் ஒருவாரம் முழுவதும் தீத்தொண்டு வாரமாக கடைபிடித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் தினமும் பெட்ரோல் விற்பனை நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுரேஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர்கள் பெரியண்ணன், கணேசன் உள்ளிட்டோர் தீத்தொண்டு நாள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.