< Back
மாநில செய்திகள்
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு
கரூர்
மாநில செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு

தினத்தந்தி
|
7 Oct 2023 11:28 PM IST

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கரூர் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை தாங்கினார். வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தீயணைப்புத்துறை மாவட்டஅலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தகவல் அறியும் உரிமை சட்டம் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்