< Back
மாநில செய்திகள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது குறித்து விழிப்புணர்வு

தினத்தந்தி
|
6 Dec 2022 4:20 PM IST

கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மறைமலைநகர் செயற்பொறியாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மின் இணைப்பு எண்ணுடன் பொதுமக்கள் ஆதாரை இணைக்க வருகிற 31-ந் தேதி வரை தமிழக அரசு அவகாசம் அளித்துள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஆதாரை இணைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து கூடுவாஞ்சேரி துணை மின் நிலைய அலுவலகத்தில் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் நேற்று கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மறைமலைநகர் செயற்பொறியாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர் நாகராஜன், மின்வாரிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு வாகனம் நகரின் முக்கிய தெருக்களில் சென்று பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்