< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராய தடுப்பு குறித்து விழிப்புணர்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கள்ளச்சாராய தடுப்பு குறித்து விழிப்புணர்வு

தினத்தந்தி
|
16 Jun 2022 8:37 PM IST

கலைநிகழ்ச்சி மூலம் கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு போலீஸ் சார்பில் கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது மதுபானம், சாராயம் அருந்துவதால் ஏற்படும் சமூக பிரச்சினை குறித்து விளக்கினார்.

தொடர்ந்து கலைக்குழு சார்பில் கரகாட்டம், கோலாட்டம், பறையிசை, பொய்க்கால் ஆட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பஸ்நிலையத்துக்கு வந்த பொதுமக்கள், பயணிகள் பார்வையிட்டனர். இதேபோல் பழனி அடிவாரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி பகுதிகளிலும் கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்