திருவள்ளூர்
கனகம்மாசத்திரத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் - துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
|கனகம்மாசத்திரத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலைவிபத்துகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் கனகம்மாசத்திரத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் சாலை விதிமுறைகள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்தும், அவசர அழைப்பு எண் 100-ஐ பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
ஊராட்சிகளில் கஞ்சா, மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குற்றங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம் என எடுத்து கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் தங்கள் கிராமங்களில் கூட்டத்தில் போலீசார் தெரிவித்த அனைத்து கருத்துகளையும் எடுத்துகூறுவோம். போலீசாருடன் நட்புடன் செயல்படுவோம் என்று தெரிவித்தனர்.