< Back
மாநில செய்திகள்
மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
10 March 2023 12:30 AM IST

தேனியில் கலால் துறை சார்பில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனியில் கலால் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்த ஊர்வலத்தை கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், மாணவர்கள் பலர் கலந்துகொண்டு மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பிய படியும் ஊர்வலமாக சென்றனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் பாரஸ்ட்ரோடு, பங்களாமேடு, மதுரை சாலை, பழைய டி.வி.எஸ். சாலை வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் கோட்ட கலால் அலுவலர் சத்தியபாமா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாபு, தனி வருவாய் அலுவலர் முத்தமிழ், முதுநிலை வருவாய் அலுவலர் பொன்கூடலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்