< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
|11 Jun 2022 6:20 PM IST
வந்தவாசியில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
வந்தவாசி
வந்தவாசியில் நகராட்சி சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
ஊர்வலத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும்,
குப்பையை தரம் பிரித்திடுவோம். சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம் என்ற துண்டு பிரசுரங்களை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் அலுவலர் பழனி மேற்பார்வையாளர்கள் ஏசுபாதம், லோகநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் குப்பை இல்லாத தூய்மை நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோல் நகராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து அரிமா சங்க பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.