< Back
மாநில செய்திகள்
தூய்மை நகரத்துக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தூய்மை நகரத்துக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
17 Sept 2023 11:47 PM IST

அரக்கோணத்தில் தூய்மை நகரத்துக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரக்கோணம்

அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் நகராட்சி சார்பில் தூய்மைக்கான நகரத்தை ஏற்படுத்த 2.0 திட்டத்தின் கீழ் என் குப்பை என் பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் மனோகர் பிரபு, பொருளாளர் லட்சுமிபதி, சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியபடி சுவால்பேட்டை விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து ஆணையாளர் ரகுராமன் தலைமையில் தூய்மை உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் குணசேகரன், கஜேந்திரன், நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அசோகன், எத்திராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்