< Back
மாநில செய்திகள்
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
25 Nov 2022 9:25 PM IST

திருவண்ணாமலையில் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் மகளிர் குழுவினர் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சர்வதேச பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான மற்றும் சர்வதேச மனித உரிமை தின விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம் பெரியார் சிலை, அண்ணா சிலை வழியாக சென்று காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

இதில் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றனர்.

அப்போது அவர்கள் பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை அருகே பெண்களுக்கு மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலக பணியாளர்கள், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்