< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
|7 May 2023 12:20 AM IST
கரூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
எரிபொருள் சிக்கன வார விழாவை முன்னிட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலமானது கரூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி பஸ் நிலைய ரவுண்டானா, திண்ணப்பா கார்னர், வடக்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் ரோடு வழியாக வந்து மீண்டும் தாலுகா அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ஏஜென்சி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.