கிருஷ்ணகிரி
விழிப்புணர்வு ஊர்வலம்
|ஊத்தங்கரையில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் பெண் சிசுக்கொலை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஊாவலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கி கல்லாவி ரோடு, அரசமரத்தெரு, நான்கு முனை சந்திப்பு வழியாக பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமரன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தை திருமணம் தடுத்தல், பெண்கள் மேம்பாட்டிற்கு கல்வியின் அவசியம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.