நாமக்கல்
தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
|எருமப்பட்டி அருகே தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
எருமப்பட்டி
எருமப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் அழகேசன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் தொழுநோய் குறித்த பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு தொழுநோய் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் அரசு ஆரம்ப சுகாதார அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி வளாகத்தில் தொழுநோய் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ரகுபதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுரளி பாபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், சிவானந்தன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.