திருநெல்வேலி
விழிப்புணர்வு ஊர்வலம்
|திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேசனல் பள்ளி சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேசனல் பள்ளி சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வி.எஸ்.ஆர். வணிக வளாகம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் எலிசபெத் வரவேற்றார். மாணவர்கள் போதை மற்றும் மதுவிற்கு எதிரான விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு சென்றனர். முக்கிய சந்திப்புகளில் ஓரங்க நாடகம், ஆடல் பாடல் மூலம் மது மற்றும் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.