< Back
மாநில செய்திகள்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

நாமக்கல்லில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல்லில் நேற்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை நாமக்கல் அரசு மருத்துவமனை முன்பு இருந்து மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் கலந்து கொண்டு, மார்பக புற்றுநோயை தடுக்க டாக்டரிடம் ஆலோசனை பெற்று, பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

மேலும் செய்திகள்