< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

தலைஞாயிறு ேபரூராட்சியில் தகவல் அறியும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தலைஞாயிறு பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமைச்சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்துக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணபாபு தலைமை தாங்கினார். தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தை தலைஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ராஜ் தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சின்ன கடைத்தெரு, மேலத்தெரு, அக்ரகாரம் வழியாக தலைஞாயிறு பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார், தூய்மை பணி மேற்பார்வையாளர் அகிலா மற்றும் போலீசார், ஊழியர்கள், தீயணைப்புத்துறை நிலைய பணியாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்