ராமநாதபுரம்
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
|ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி தீயணைப்புத்துறை அலுவலகம் வரை சுமார் 4.200 மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
போட்டியை முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு வர்த்தக சங்கத்தலைவர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி அலுவலர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலுசாமி, சுந்தராம்பாள், முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் ராம பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.