< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
கல்பாக்கம் கடற்கரை பகுதியில் அணுசக்தி துறை சார்ந்த மணல் சிற்பங்கள் வடிவமைப்பு
|29 Aug 2022 2:37 PM IST
கல்பாக்கம் நகரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் அணுசக்தி துறையின் சின்னங்கள் அடங்கிய மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இந்திய அணுசக்தி துறையின் இந்திரா காந்தி அணு ஆராயச்சி மைய வளாகத்தில் பல அணு சார்ந்த துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பொதுப்பணி துறை நிறுவனம் சார்பில் கல்பாக்கம் நகரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் அணுசக்தி துறையின் சின்னங்கள் அடங்கிய மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன.
இந்த மணல் சிற்பத்தை செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் ஷாஜீவனா, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், அணுசக்திதுறை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.