< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணா்வு
|21 Nov 2022 12:15 AM IST
வேப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேப்பூர்,
வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையபெருமாள், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு நடைமுறைகள், குற்றவாளிகள் அறைகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் போலீசார், மாணவ-மாணவிகளிடம் விளக்கி கூறினர். தொடர்ந்து, காவல்துறை குறித்து நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் வேப்பூர் மற்றும் பூலாம்பாடி அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.