< Back
மாநில செய்திகள்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
20 Oct 2023 12:30 AM IST

வால்பாறையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நடந்தது.


வால்பாறையில் போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விதிகள், சட்ட விரோத செயல்தடுப்பு, ஊருக்குள் குற்ற சம்பவங்கள் தடுப்பு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வால்பாறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் பேசினார். அப்போது, வால்பாறை பகுதியை பொறுத்தவரை சிறிய இடப் பரப்பை கொண்ட மலைப் பகுதியாகும். இதில் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதில் ஆட்டோ ஓட்டுனர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே ஒவ்வொரு நாளும் உங்களது ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடிய பயணிகளின் நிலை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.பயணிக்க வரக்கூடியவர்கள் வெளி நபர்களா அல்லது உள்ளூர் நபர்களா அவர்களின் செயல்பாடுகளில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும். எனவே பயணிகளிடம் வித்தியாசமான நடைமுறைகளை உணர்ந்தால் உடனே அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மதித்து ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நகரில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. வால்பாறை பகுதியின் அனைத்து விதமான வளர்ச்சியிலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிலும் ஆட்டோ ஓட்டுனர்களின் பங்கு முக்கியம் என்பதை உணர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார். இதில் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்