< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
|29 Sept 2022 1:13 AM IST
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
விருதுநகர் நகராட்சியும் ஜே.சி. ஹேப்பி சங்கமும் இணைந்து காகித பயன்பாடு குறித்த சைக்கிள் பேரணி நடத்தினர். நகராட்சியில் இருந்து நகராட்சி தலைவர் மாதவன் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில்நிறைவடைந்தது. காகிதப்பையை பயன்படுத்துவோம், காற்று மாசுபடுதலை தடுப்போம், சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் போன்ற விழிப்புணர்வு அட்டைகளை எடுத்து சென்றனர். சைக்கிள் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.