கடலூர்
ஸ்ரீமுஷ்ணத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
|ஸ்ரீமுஷ்ணத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தை சென்றடைந்தது. முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி உதவியாளர் ராஜசேகர் வரவேற்றார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், உதவி தலைமை ஆசிரியை பொன்மணி, கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், ஷாஜகான், சதீஷ்குமார், ராமையன், பிலோமினாள் மலர்க்கொடி ஜேம்ஸ், வசந்தி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக ஆர்வலர்கள் ஆனந்த.வீரவேல், ஆனந்த.பார்த்திபன், ஆசிரியர் முரளி, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், பேரூராட்சி மன்ற ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.