< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

தினத்தந்தி
|
8 Oct 2023 4:45 AM IST

கொடைக்கானல் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

கொடைக்கானல் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், கொடைக்கானல் ஏரிச்சாலையில் நேற்று நடைபெற்றது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வனச்சரகர் சிவக்குமார் வரவேற்றார். கொடைக்கானல் கோர்ட்டு நீதிபதி கார்த்திக், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கொடியசைத்து சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஏரிச்சாலையில் 4½ கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த சைக்கிள் ஊர்வலம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலையை அடைந்ததும் நிறைவடைந்தது. இதில், ஆர்.டி.ஓ. ராஜா, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்