கடலூர்
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு போட்டி
|மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.
நெல்லிக்குப்பம்,
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஓவிய போட்டி மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு நடந்த விழிப்புணர்வு போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சாதிகா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் வனஜா, வெங்கடேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் நிற துணிப்பை வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இலியாஸ், ஹபிபாபி, மோகனவள்ளி ஜனார்த்தனன், பேரூராட்சி அலுவலர்கள் தமிழ்மாறன், சீனுவாசன், கார்த்திகேயன், கோபிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.