தென்காசி
மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு போட்டி
|மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு போட்டி நடந்தது.
பாவூர்சத்திரம்:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மதுவிலக்கு விழிப்புணர்வு போட்டி நடத்தினர். இதையொட்டி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேச்சுப்போட்டி தென்காசியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி பி.உதயசெல்வி வருவாய் மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். அந்த மாணவியை பாராட்டி ரூ.6 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டுச்சான்றிதழும் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.