< Back
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள்

தினத்தந்தி
|
11 Jun 2022 1:06 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

'பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்' என்ற தலைப்பின் கீழ் இன்று (சனிக்கிழமை) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தேனாம்பேட்டை லூப் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் மேயர் பிரியா கலந்துகொள்கிறார்.

மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத்தலங்களின் வெளிப்புறம், ரெயில் நிலையங்களின் வெளிப்புறம், சுற்றுலாத்தலங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் தகனமேடையின் சுற்றுப்புறம் போன்ற பகுதிகளில் தீவிர தூய்மை பணிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்