திருப்பத்தூர்
மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம்
|திருப்பத்தூரில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டம் சார்பாக மழைக்காலங்களில் மின் விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பேரணி நடந்தது.
தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், துணை ஆட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் அருகில் முடிவுற்றது.
மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், அறுந்து விழுந்த மின்சார கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்,
இடி மின்னலின் போது தஞ்சமடைய மின்கம்பங்கள், கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள் உள்ளிட்ட மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அருள்பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, கண்ணன், சுப்பிரமணி, சந்தானம் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.