< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
|19 April 2023 12:31 AM IST
தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
புகழூர் நகராட்சிக்குட்ட நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆம்புலன்ஸ், லாரி கார் டிரைவர்கள், பயணிகள், பொதுமக்களிடம் வழங்கினர். இதில், குழந்தைகளை சமையல் அறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது. மின்சார தீ விபத்து ஏற்பட்டால் உடனே மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். சிலிண்டர் வாழ்வு தீப்பற்றினால் சணல், சாக்கு அல்லது போர்வையை தண்ணீரில் நனைத்து அதன் மீது போட்டு மூட வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் மின் சாதன பொருட்களை வைக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்டு இருந்தன.