திருவண்ணாமலை
தூய்மை சேவைக்கான விழிப்புணர்வு ஊா்வலம்
|திருவண்ணாமலையில் தூய்மை சேவைக்கான விழிப்புணர்வு ஊா்வலம் நடந்தது.
திருவண்ணாமலை நகராட்சி சார்பில் தூய்மை சேவைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஈசான்ய மைதானத்தில் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் நகரமன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன், நகர் நல அலுவலர் வீராசாமி மோகன்குமார், சுகாதார அலுவலர் செல்வராஜ், நகர மன்ற துணைத்தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தூய்மையான நகரம், என் குப்பை என் பொறுப்பு, பிளாஸ்டிக் இல்லா திருவண்ணாமலை நகரம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியடி ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை தொடர்ந்து தூய்மை சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.