திருவள்ளூர்
குழந்தைகள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம்
|குழந்தைகள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
உலக குழந்தைகள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு ரெயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. குழந்தைகளை பெற்றோர் தங்கள் அரவணைப்பில் வைத்திருக்க வேண்டும், வீட்டை விட்டு தனியாகவோ, அடையாளம் தெரியாத நபருடனோ அனுப்பி வைக்க கூடாது. பெண் குழந்தைகள் என்றால் குட் டச், பேட் டச் ஆகியவற்றை சொல்லி வளர்க்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் யாரேனும் உணவுப் பொருட்களையோ, இனிப்பு போன்றவற்றையோ வழங்கினால் சாப்பிடக் கூடாது எனவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், குழந்தைகள் காப்பக நிர்வாகிகள், என 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது ரெயில் பயணிகளிடம் குழந்தைகள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.