< Back
மாநில செய்திகள்
போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்
அரியலூர்
மாநில செய்திகள்

போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

தினத்தந்தி
|
17 May 2023 12:42 AM IST

போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை ஜெயங்கொண்டம் போலீசார் மகிமைபுரத்தில் நடத்தினர். அப்போது போதை மருந்துகளால் ஏற்படும் விளைவுகள், உடல்நல குறைவுகள், சாலை விபத்துகள் போன்றவை குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தவல்லி, உமாதேவி ஆகியோர் வாகன ஓட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினர். மேலும் இது பற்றி அவர்களது நண்பர்கள், சக மாணவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கும், மாணவர்களுக்கும் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்