< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு பற்றி விழிப்புணர்வு பிரசாரம்
|21 Oct 2022 12:36 AM IST
ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட ஜெயங்கொண்டம் நான்கு ரோடு, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீத்தடுப்பு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட அறிவுரை வழங்கினர்.