< Back
மாநில செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
9 Jun 2022 12:15 AM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கீழப்பழுவூர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அரியலூர் மாவட்ட வனத்துறை ஆகியோர் இணைந்து கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் வனத்துறை அலுவலர் முத்து மணி வரவேற்புரையாற்றினார். மூத்த சிவில் நீதிபதி அழகேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மகாலட்சுமி கலந்து கொண்டு, பறவைகளை நமது விருந்தாளியாக பாவிக்க வேண்டும். பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் நல்ல காற்றை தருகிற சூழலை பாதுகாக்க வேண்டும். மேலும் நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இந்த முகாமில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பறவைகள் சரணாலயத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை வேண்டும். பறவைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் தங்கும் விடுதி அமைத்து தர வேண்டும். பூங்கா அமைக்க வேண்டும். கரைகளை உறுதியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்