< Back
மாநில செய்திகள்
சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு முகாம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

வீரசோழபுரத்தில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு முகாமில் செல்போனில் பதிவான ஆபாச புகைப்படங்கள் அழிக்கப்பட்டன.

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண்களின் ஆபாச படம் மற்றும் வீடியோ விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வீரசோழபுரம் கிராமத்தில் சைபர் கிரைம், காவல்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கி பேசும்போது, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண்களை ஆபாசமாக சித்தரித்த விவகாரத்தில் இதே பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபாச படம் மற்றும் வீடியோவை சில நண்பர்களுக்கு அனுப்பியுள்ளது தெரிய வருகிறது. மேலும் அவர்கள் மூலம் ஆபாச புகைப்படம் அல்லது வீடியோ உங்கள் செல்போனுக்கு வந்திருந்தால் அதனை குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் கொடுத்து ஆபாச பதிவை முற்றிலும் அழித்துவிடலாம். ஆனால் இந்த முகாமில் அழிக்காமல் காவல்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதை ஏற்று அந்த பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் தங்களது செல்போனை போலீசாரிடம் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் அந்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை அழித்துவிட்டு செல்போனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதில் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலகாசன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்புதுரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்