< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
23 July 2022 12:15 AM IST

அரப்பாக்கம் ஊராட்சியில் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

ஆற்காடு

ஆற்காடு அருகே உள்ள அரப்பாக்கம் ஊராட்சியில் சமூக பாதுகாப்பு துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் சார்பில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் கே.பேபிகன்னியப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைகள் மீதான வன்முறை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுபோன்ற கூட்டங்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கவுதமி, சைல்டு லைன் உறுப்பினர்கள் பர்சானா, லோகேஷ் மற்றும் அங்கன்வாடி தரணி, அரப்பாக்கம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், கிராம செவிலியர் அற்புதம், மகளிர் குழு தலைவி கலைச்செல்வி மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்