< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
|5 Oct 2023 1:30 AM IST
தென்னையில் நோய் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் மலைப்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம் கிராமங்களில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் வேளாண்மை துறையின் வயல் நோக்கி பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஒரு கிராமத்திற்கு தலா 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வேளாண் பல்கலைக்கழக நோயியல் துறை துணை பேராசிரியர் லதா தலைமை வகித்தார். முகாமில் தென்னையில் கேரள வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், சாறு வடிதல், நுண்ணூட்ட பற்றாக்குறை, குருத்தலுகல் நோய் ஆகியவற்றினை தடுக்கும் முறைகள் பற்றியும், காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு தடுப்பு முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.