திண்டுக்கல்
விழிப்புணர்வு முகாம்
|குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
எரியோடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நாகம்பட்டி ஊராட்சி பெருமாள் கவுண்டன்பட்டியில் குழந்தை திருமணம் மற்றும் சிறுமிகள் கர்ப்பம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் தங்கவேல் தலைமை தாங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, குழந்தை திருமணம், சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது தெரியவந்தால் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது என்றார்.
இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சர்க்கரை, சுகாதார ஆய்வாளர்கள் போறப்பன், சவடமுத்து, மதிச்செல்வன், கிராம ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.