< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
திருவெண்ணெய்நல்லூரில்பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
|9 Jan 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆலோசகர் முருகன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அளித்தார். இதில் மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.