< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம்
|21 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூர் பகுதியில் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. பரமத்திவேலூர், குப்புச்சிபாளையம், பரமத்தி, நல்லூர், பொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சளி பரிசோதனை, மருத்துவம் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன மூலம் காச நோய் உள்ளதா என கண்டறியப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு காசநோய் குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுருநாதன், முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் அருண், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.