< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
12 Sept 2022 10:08 PM IST

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணர்வு முகாம் . நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், ஆதவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான ஜெ.பாலகுமரேசன் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஜே.எஸ்.டி.சாத்ராக், பாரி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாலியல் விழிப்புணர்வு பற்றியும், அதன் தொடர்பான சட்ட விதிகள் முறைகள், கடைபிடிக்க வேண்டிய முறைகளை பற்றியும் பேசினார்கள். முடிவில் ஆசிரியை தேவமலர் செல்வி நன்றி கூறினார். சிறப்பாக பேசிய மாணவி ஜெயராணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்