< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
|11 Sept 2022 10:27 PM IST
வடுகப்பட்டி பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சி சார்பில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். இதில் வேளாளர் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். வீட்டில் இருந்து வரும் கழிவுகளை மக்க வைப்பது குறித்தும், பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.