< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
|3 July 2022 10:14 PM IST
உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்
கடையநல்லூர்:
இலத்தூர் வருவாய் கிராமம் சித்ராபுரம் கிராமத்தில் உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரவின்குமார் காய்கறிகள் சாகுபடி முறை, உற்பத்தியை அதிகரிக்க கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றி விளக்கிக் கூறினார். உழவர் சந்தை செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி உழவர் சந்தை துணை வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் விளக்கிக் கூறினார். உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். செங்கோட்டை உதவி தோட்டக்கலை அலுவலர் முருகன், இலத்தூர் சித்ராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்காசி உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.