கள்ளக்குறிச்சி
தியாகதுருகத்தில்எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
|தியாகதுருகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பள்ளி கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத்தமிழன் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு எழுத்துக்களை வாசித்தல், எழுதுதல், வாக்கியங்களை அமைத்தல் உள்ளிட்ட கற்றல் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் விஜயலட்சுமி, சிவகுமார், ராஜா, காயத்ரி, முகமது இதயத்துல்லா, கோகிலா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அருட்செல்வன், கண்ணன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.