< Back
மாநில செய்திகள்
முதலுதவி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அரியலூர்
மாநில செய்திகள்

முதலுதவி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
16 Sept 2023 1:08 AM IST

முதலுதவி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட பிச்சனூரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஒரு அறக்கட்டளை சார்பில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு முதலுதவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கலைமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கணபதி மற்றும் வெற்றிவேல் குழுவினர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து விளக்கி கூறினர். இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்