< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
24 Jun 2023 12:49 AM IST

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுப்பையன் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது, விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது, வாகனங்களை சீரான வேகத்தில் இயக்குவது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினர். மேலும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது, சாலை விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்